Competition in this pair is now closed, and the winning entry has been announced. Discussion and feedback about the competition in this language pair may now be provided by visiting the "Discussion & feedback" page for this pair. Entries may also be individually discussed by clicking the "Discuss" link next to any listed entry. Source text in English We're accustomed to glamour in London SE26: Kelly Brook and Jason Statham used to live above the dentist. But when Anouska Hempel's heels hit the cracked cement of the parking space outside my flat, it's hard not to think of those Picture Post photographs of royalty visiting bombed-out families during the second world war. Her mission in my modest tract of suburbia is, however, about more than offering sympathy. Hempel—the woman who invented the boutique hotel before it bore any such proprietary name—has come to give me information for which, judging by the spreads in interiors magazines and anxious postings on online DIY forums, half the property-owners in the Western world seem desperate: how to give an ordinary home the look and the vibe of a five-star, £750-a-night hotel suite. To Hempelise, in this case, a modest conversion flat formed from the middle slice of a three-storey Victorian semi.
"You could do it," she says, casting an eye around my kitchen. "Anyone could do it. Absolutely no reason why not. But there has to be continuity between the rooms. A single idea must be followed through." She looks out wistfully over the fire escape. "And you'd have to buy the house next door, of course." That's a joke. I think.
...
It's worth pausing, though, to consider the oddness of this impulse. The hotel room is an amnesiac space. We would be troubled if it bore any sign of a previous occupant, particularly as many of us go to hotels in order to do things we would not do at home. We expect a hotel room to be cleaned as thoroughly as if a corpse had just been hauled from the bed. (In some cases, this will actually have happened.) The domestic interior embodies the opposite idea: it is a repository of memories. The story of its inhabitants ought to be there in the photos on the mantelpiece, the pictures on the wall, the books on the shelves. If hotel rooms were people, they would be smiling lobotomy patients or plausible psychopaths. | The winning entry has been announced in this pair.There were 10 entries submitted in this pair during the submission phase, 3 of which were selected by peers to advance to the finals round. The winning entry was determined based on finals round voting by peers.
Competition in this pair is now closed. | இலண்டன் SE26 பகுதியின் கவர்ச்சிக்கு நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம் - கெல்லி புரூக்கும் ஜேஸன் ஸ்டாதமும் இங்கிருக்கும் பிரபல பல்மருத்துவமனை வளாக மாடியில் வசித்திருக்கிறார்கள். இருந்தாலும் எனது ஃபிளாட்டுக்கு வெளியே கார் நிறுத்துமிடத்தின் சிமெண்ட் விரிசல் மீது அனுஷ்கா ஹெம்பெலின் பாதங்கள் எழுப்பும் சத்தத்தைக் கேட்டதும், இரண்டாம் உலகப் போரில் குண்டுவீச்சில் பாதிப்படைந்த குடும்பங்களை அரச குடும்பத்தினர் பார்வையிடுகின்ற பிக்சர் போஸ்ட் இதழ் புகைப்படங்கள் ஏனோ நினைவுக்கு வரும். ஆனாலும், புறநகர்ப் பகுதியில் கண்ணியமானதொரு இடத்தில் இருக்கும் எனது வீட்டிற்கு அவர் வந்திருப்பது வெறுமனே அனுதாபத்தைக் கூறிவிட்டுப் போவதற்கு அல்ல. பொட்டிக் ஹோட்டல் என்ற பெயர் அதற்கு வருவதற்கு முன்னரே அதைக் கண்டுபிடித்திருந்தவரான ஹெம்பல் எனக்கு ஆலோசனை அளிக்க வந்திருக்கிறார். வீட்டு வடிவமைப்பு குறித்த புத்தகங்களில் பரவிக் கிடக்கும் செய்திகளையும், ஆன்லைனில் சுய-உதவிக் குறிப்பு விவாதங்களில் விரவிக் கிடக்கும் கவலையான பதிவுகளையும் கொண்டு பார்த்தால், மேற்கத்திய உலகில் வீடிருக்கும் பாதிப் பேர் வெறி கொண்டு தேடியலையும் விஷயத்திற்கான ஆலோசனை அது. அதாவது ஒரு சாதாரண வீட்டிற்கு ஒரு இரவுக்கு 750 ஸ்டெர்லிங் பவுண்டு கட்டணம் வசூலிக்கிற ஹோட்டல் அறையின் தோற்றத்தையும் உணர்வையும் கொண்டு வருவது எப்படி என்கிற ஆலோசனை. இங்கே ஒரு மூன்று மாடி விக்டோரியன் செமி குடியிருப்பின் நடு அடுக்கில் இருக்கும் கண்ணியமானதொரு ஃபிளாட்டிற்கு அவர் இந்த ஆலோசனைகளை அளிக்கப் போகிறார். “நீங்கள் தாராளமாகச் செய்யலாம்” என்றார் எனது சமையலறையைக் கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டே. “யாரும் செய்யலாம். ஏன் செய்யக் கூடாது. ஆனால் அறைகளுக்கிடையில் ஒரு தொடர்ச்சி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே யோசனை எல்லா இடங்களிலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.” அவசர கால வழியை ஊடுருவிப் பார்த்தார். “அடுத்த வீட்டையும் கூட நீங்கள் வாங்க வேண்டியிருக்கும்” என்றார். நகைச்சுவைக்காகச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ... எத்தனை விநோதமாக இருக்கிறதென்பதை ஒரு கணம் யோசித்துப் பார்ப்பது தகும். ஹோட்டல் அறை என்பது சட்டென்று ஞாபகங்களைத் துறக்கும் ஒரு வெளி. முன்னால் இருந்தவரின் சுவடுகளை ஒரு ஹோட்டல் அறை இன்னும் சுமந்து கொண்டிருந்தால் நமக்கு அது பெரிய தொந்தரவாகி விடும். அதிலும் நம்மில் பலர் ஹோட்டல்களில் தங்குவதே நாம் வீட்டில் செய்யத் துணியாததை செய்யும் பொருட்டு தான். ஒரு ஹோட்டல் அறை நாம் வாசம் செய்யும் முன் ஒரு பிணம் இருந்த இடத்தைச் சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம். (சில சந்தர்ப்பங்களில் உண்மையிலேயே அதுபோல் நேர்கின்றதும் உண்டு.) ஆனால் வீட்டின் உள்வடிவமைப்பு விஷயமோ நேரெதிரானது. அது நினைவுகளின் காப்பகம் போல் இருக்க வேண்டியது. அந்த வீட்டில் வசித்தவர்களின் கதை அங்கிருக்கும் சித்திரங்களில் இருக்கும் , சுவரில் தொங்கும் புகைப்படங்களில் இருக்கும், அலமாரியின் புத்தகங்களிலும் இருக்கும். ஒப்பிட்டால் ஹோட்டல் அறைகள் என்பவை மூளைநரம்பு அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் புன்னகை போல அல்லது சிரித்தமுகமான மனநோயாளிகளின் சிரிப்பைப் போலத் தான். | Entry #14287 — Discuss 0
Winner Voting points | 1st | 2nd | 3rd |
---|
16 | 4 x4 | 0 | 0 |
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 3.33 | 3.33 (3 ratings) | 3.33 (3 ratings) |
- 1 user entered 1 "like" tag
ஹோட்டல் அறை என்பது சட்டென்று ஞாபகங்களைத் துறக்கும் ஒரு வெளி. முன்னால் இருந்தவரின் சுவடுகளை ஒரு ஹோட்டல் அறை இன்னும் சுமந்து கொண்டிருந்தால் நமக்கு அது பெரிய தொந்தரவாகி விடும். | Good term selection | Narendran No agrees/disagrees | |
| இலண்டன் SE26ல் (தென் கிழக்குப் பகுதியில்) நாம் கவர்ச்சிக்குப் பழக்கப்பட்டுள்ளோம்: கெல்லி ப்ரூக்கும் ஜேசன் ஸ்டாதமும் பல் மருத்துவரின் இருப்பிடத்திற்கு மேல் வசித்து வந்தார்கள். ஆனால் அனௌஷ்கா ஹெம்பெல்லின் குதி கால்கள் என் குடியிருப்பின் வெளியே உள்ள வண்டிகள் நிறுத்துமிடத்தின் சிமிண்ட் விரிசலில் பட்டவுடன், இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது குண்டுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்வையிட வந்தபோது பிக்சர் போஸ்டில் வெளியான அரச குடும்பத்தினரை நினைக்காமல் இருப்பது கடினம். எனினும், என்னுடைய அடக்கமான புறநகர் பிரதேசத்தில் அவள் மேற்கொண்ட பணி, அனுதாபம் காட்டுவதற்கும் மேலானது. பெண்களுக்கான உணவு விடுதியை, அது வேறெந்த வணிகப் பெயரைக் கொள்வதற்கு முன், கண்டு பிடித்த பெண்மணி – ஹெம்பெல் – மனையலங்கார இதழ்களின் பக்கங்களையும், நீங்களே செய்து பாருங்கள் போன்ற இணைய மன்றங்களிலும் பிரசுரமாகும் அக்கறை மிகுந்த பரந்த கருத்துக்களையும் சீர்தூக்கும்போது, மேலை நாட்டுப் பாதி சொத்துரிமையாளர்கள் விரக்தியடைவதாகத்தோன்றும் ஒரு பிரச்சினை; சாதாரணமான ஒரு வீட்டிற்கு, ஒரு இரவிற்கு 750 பவுண்ட் வசூலிக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலின் அனைத்து சவுகரியங்களும் கொண்ட அறையின் அமைப்பை எவ்வாறு அளிப்பது என்ற தகவலை எனக்கு அளிப்பதற்காக வந்துள்ளாள். இந்த சந்தர்பத்தைப் பொறுத்த வரை, ஹெம்பெல் ஆலோசனையில் ஆர்பாட்டமற்ற மாற்றப்பட்ட ஒரு விக்டோரியா காலத்துப் பகுதி அடுக்கு மாடி வீட்டின் நடுப்பகுதி. ”உங்களால் முடியும்,” என்றாள் அவள் என்னுடைய சமையலறையைச்சுற்றி நோட்டமிட்டபடி. “எவரும் செய்ய முடியும். முடியாது என்பதற்கு அறுதியான காரணமேதுமில்லை.அனால் அறைகள் நடுவே தொடர்பு இருக்க வேண்டும். அது போல, கடைசி வரை ஒரே மாதிரியாகக் காட்சி தர வேண்டும்.” வேதனையுடன் அவள் தீ விபத்தின் போது வெளியேறும் வழிமீது பார்வையைச் செலுத்தினாள். “உண்மையைச் சொல்லப்போனால், அடுத்த வீட்டையும் நீங்கள் வாங்க வேண்டும்.” “அது வேடிக்கையாகத்தோன்றும் என நான் நினைக்கிறேன்.” ... எனினும், இந்த துடிப்பின் சிரமங்களைக் கருத, சிறிய இடைவெளி அவசியம். ஓட்டல் அறை நினைவிழந்த நபருக்கான இடம். நம்மில் பலர் வீட்டில் செய்யமுடியாதவற்றைச் செய்ய ஓட்டலுக்குப்போவதால், அங்கு நமக்கு முன் தங்கியவரின் தடயங்கள் மிச்சமிருந்தால் நாம் சங்கடப்படுவோம். படுக்கையிலிருந்து இறந்தவர் உடல் நீக்கப்பட்டவுடன் எவ்வாறு அந்த அறை சுத்தமாக்கப்படுகிறதோ அவ்விதமே ஓட்டல் அறையும் முற்றிலும் சுத்தமாக்கப் படுவதை நாம் எதிர்பார்க்கிறோம் (சில சந்தர்பங்களில், இது உண்மையாகவே நடந்துள்ளது). ஆனால் வீட்டின் உள் அலங்காரம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது: அது நினவுகளின் சேமிப்பிடம். அதில் வசித்த, வசிக்கும் நபர்களின் கதை கூடத்தில் தீக்கணகணப்பு இடத்தின் மீதான அடுக்கறையின் புகைப்படங்களில், சுவற்றில் உள்ள சித்திரங்களில் மற்றும் அடுக்கறைகளின் புத்தகங்களின் மூலம் வெளிப்படும் இடம். ஓட்டல் அறைகள் மனிதர்களானால், சிரித்தவாறு இருக்கும் மூளை மடல் திறப்பு நோயாளிகள் அல்லது நம்பத்தக்க மன நோயாளிகளாக இருக்கும்.
| Entry #14168 — Discuss 0
Finalist Voting points | 1st | 2nd | 3rd |
---|
7 | 0 | 3 x2 | 1 x1 |
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 3.20 | 3.20 (5 ratings) | 3.20 (5 ratings) |
| லண்டன் எஸ் இ 26ல் வசிப்பதால் கவர்ச்சியான தோற்றம் எங்களுக்கு பழகிப் போன ஒன்று: கெல்லி ப்ரூக்கும் ஜேசன் ஸ்டாத்தமும் பல் மருத்துவரின் வீட்டிற்கு மேலே வசித்து வந்தவர்கள். அனுஷ்கா ஹெம்பலின் காலடி என்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு அருகே உடைந்த சிமெண்ட் தரையில் பட்டவுடன், அது இரண்டாம் உலக யுத்தத்தின் போது குண்டடிபட்ட குடும்பங்களைக் காண வந்த அரச குடும்பங்களின் "பிக்சர் போஸ்ட்" நிழற்படங்களை ஏனோ நினைவுபடுத்தியது. ஆனால் என்னுடைய சிறுகுடிலுக்கு வருகை தந்த அவரது குறிக்கோள் அனுதாப உணர்வு வெளிப்படுத்துவதைக் காட்டிலும் மேலோங்கியதாக இருந்தது. ஒரு சாதாரண வீட்டை ஒரு இரவிற்கு 750 யுரோ அளிக்கும் ஐந்து நட்சத்திரஹோட்டல் அறையின் தோற்றத்தைப் போல எவ்வாறு மாற்றுவது என மேற்குலகில் இருந்த பாதி வீட்டுரிமையாளர்கள் ஆவலுடன் உட்புற அழகு மேம்பாட்டுக்கு உதவும் இதழ்களிலும் டி ஐ ஒய் மன்றங்களிலும் ஆவலுடன் தேடி வந்தனர், பொடிக் ஹோட்டல் என்ற தனியுரிம பெயர் வழங்கப்படாததற்கு முன்பே, அப்படிப்பட்ட அமைப்பை உருவாக்கிய ஹெம்பல், அவ்வாறு ஒன்றில் கேட்கப்பட்ட என்னுடைய கேள்விகளுக்கு தகவலளிக்க வந்திருந்தார். ஹெம்பலின் பார்வையில், இது மூன்று மாடி விக்டோரியன் செமியில் நடுப்பகுதியிலிருந்து உருமாற்றப்பட்ட ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பு. என்னுடைய சமையலறையை பார்த்துக் கொண்டே "உன்னால் முடியும்" என்றார். "எல்லோராலும் முடியும், முடியாது என்று சொல்வதற்கு ஒரு காரணமும் இல்லை. ஆனால் அறைகளுக்கிடையே ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டும். ஒரே மாதிரியான வடிவமைப்பை பின்பற்ற வேண்டும்". என்னுடைய புகை போக்கியை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்துக் கொண்டே, "நீ அடுத்த வீட்டையும் வாங்க வேண்டியிருக்கும்" என்றார். அது கேலியாக சொன்னது என்று நினைக்கிறேன். இந்த விசித்திரமான தீடீர் சிந்தனையைப் பற்றி ஆலோசிக்க, சிறிய இடை நிறுத்தம் தேவைப்பட்டது. ஹோட்டல் அறை பழைய நினைவுகளை மறக்க உதவும் இடம். முன்பு தங்கியிருந்தவர்களின் எந்தவிதமான தடயம் இருந்தாலும் அது நமக்கு சிக்கலை உருவாக்கும், ஏனெனில் நம்மில் பலர் வீட்டில் செய்ய முடியாத பணிகளைச் செய்ய ஹோட்டல்களுக்குச் செல்வோம். ஒரு பிணத்தை படுக்கையிலிருந்து நீக்கிய பின் செய்யப்படும் சுத்தத்தை போல (சில நேரங்களில் இது உண்மையாகவே நடைபெற்றும் உள்ளது) பலருக்கும் ஹோட்டல் அறை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் வீட்டின் உட்புற அழகூட்டலுக்கு இதற்கு எதிர்மறையான உருவாக்கச் சிந்தனை தேவைப்படும்: இது நினைவுகளின் உறைவிடம். அதில் வசிப்பவர்களின் நிழற்படங்கள் அவர்களின் கதையைச் சொல்லும் விதமாக மாடங்களிலும், சித்திரங்கள் சுவர்களிலும், புத்தகங்கள் அலமாரிகளிலும் வைக்கப்பட வேண்டும். ஹோட்டல் அறைகளை மக்களாகக் கொள்வோமானால், அவர்கள் சிரிக்கும் மூளைமாற்று திறன் அறுவைசிகிச்சை நோயாளிகளாகவோ அல்லது நம்பத்தகுந்த மன நோயாளிகளாகவோ இருப்பார்கள். | Entry #14164 — Discuss 0
Finalist Voting points | 1st | 2nd | 3rd |
---|
5 | 0 | 1 x2 | 3 x1 |
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 2.88 | 3.00 (4 ratings) | 2.75 (4 ratings) |
| Non-finalist entries The following entries were not selected by peers to advance to finals-round voting. நாங்கள் இலண்டன் SE26 இல் கவர்ச்சிக்குப் பழகிவிட்டுள்ளோம்: கெல்லி புரூக்கும் ஜேஸன் ஸ்டெதமும் பல் மருத்துவரின் மேற்றளத்தில் வாழப் பழகிவிட்டனர். என்றாலும் என்னுடைய மனைக்கு வெளியே வாகனத் தரிப்பிடப் பகுதியில் வெடித்துப் போயுள்ள சீமெந்தை அனௌஸ்கா ஹெம்பெல்லின் குதிகள் தொட்ட போது, இரண்டாம் உலகப் போரில் குண்டு பட்டு வெளியேறிய குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற பட அஞ்சலட்டைகளை நினைத்துப் பார்க்காமலிருப்பது கடினமாயுள்ளது. என்றாலும் புறநகர்ப் பகுதியில் உள்ள என்னுடைய சாதாரண சிறுவீட்டுக்கு அவர் வந்தமை ஆறுதலளிப்பதை விடவும் ஓரளவு கூடுதலாக இருந்தது. ஹெம்பல்—அவர்தான் இத்தகைய பெயருடைய கடைவிடுதியை வேறெவரும் பெயரிட முன் கண்டு பிடித்த பெண்—மேற்கத்திய உலகின் சொத்துரிமையாளர்கள் வெறுத்துப் போயுள்ள நிலையில், சஞ்சிகைகளினாலும், சுயமாகச் செயற்படுவது பற்றிய இணையவழி அரங்கங்களினாலும் நிறைந்த உட்புறவமைப்பைப் பற்றி எனக்குத் தகவல் தர வந்திருக்கிறார்: அதுதான் ஒரு சாதாரண வீட்டுக்கு ஓர் இரவுக்கு £750 அறவிடும் ஐந்து நட்சத்திரத் தங்கு விடுதியின் தோற்றத்தையும் சுற்றுச் சூழலையும் வழங்குவது எப்படியென்பது. இந்த வகையில் ஹெம்பலைஸ் என்பது விக்டோரியா காலத்தியதைப் போன்ற ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தின் நடுப் பகுதியில் உள்ள சாதாரணமான மனையே ஆகும். என்னுடைய சமையலறைப் பக்கம் ஒரு கண் பதித்தவாறே, "நீயே அதைச் செய்யலாம்" என்றார் அவர். "யாரும் செய்திருக்கலாம். ஏன் முடியாது என்பதற்கு நிச்சயமாக ஒரு காரணமும் இல்லை. என்றாலும் அறைகளுக்கிடையில் தொடர்ச்சி இருக்க வேண்டும். ஒரு தனியான ஒரு திட்டமிடலை நன்கு பின்பற்றப்பட வேண்டும்." தீக்காப்பு தப்பு வழியை ஆவலுடன் பார்க்கிறார் அவர். "அத்தோடு, நிச்சயமாக நீங்கள் அடுத்த வீட்டையும் விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்." அது ஒரு நகைச்சுவை. அப்படித்தான் நான் நினைக்கிறேன். ... என்றாலும், உணர்ச்சி வேகத்தின் தனித்துவத்தைப் பற்றிப் பார்ப்பதற்காகச் சற்று இடை நிறுத்துவது நல்லது. இந்த விடுதி அறை ஒரு வகையான மறதி நோயை ஏற்படுத்துமிடம். குறிப்பாக எங்களில் பலர் நாங்கள் வீட்டில் செய்யாதவற்றைச் செய்வதற்காகவே விடுதிகளுக்குச் செல்வதால், முந்திய குடியிருப்பாளுடைய அடையாளம் எதனையும் இது கொண்டிருந்தால் நாங்கள் குழம்பிப் போயிருப்போம். விடுதி அறையொன்று அப்போதுதான் படுக்கையிலிருந்து ஒரு பிணத்தை எடுத்துவிட்டது போன்று முடிந்தளவு சிறப்பாகத் துப்புரவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். (சில நிலைமைகளில், இது உண்மையிலேயே நடந்திருக்கும்.) வீட்டின் உட்புறமோ நேரெதிர்க் கருதுகோளைக் கொண்டிருக்கிறது: அது ஞாபகங்களைத் திரும்பக் கொண்டு வருவது. இதன் குடியிருப்பாளர்களின் கதையோ தண்டயப் பலகையிலுள்ள ஒளிப்படங்கள், சுவரிலுள்ள படங்கள், அலுமாரிகளிலுள்ள புத்தகங்கள் என்பவற்றில் இருக்க வேண்டும். விடுதி அறைகள் மனிதர்களாயிருந்தால், அவர்கள் நரம்புகளை வெட்டிவிட்ட நோயாளிகளைப் போல அல்லது நிச்சயமான மனநோயாளிகளாக இருப்பார்கள். | Entry #14060 — Discuss 0
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 2.63 | 2.25 (4 ratings) | 3.00 (4 ratings) |
- 1 user entered 1 "dislike" tag
இந்த வகையில் ஹெம்பலைஸ் என்பது விக்டோரியா காலத்தியதைப் போன்ற ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தின் நடுப் பகுதியில் உள்ள சாதாரணமான மனையே ஆகும். | Mistranslations There were many mistranslations. It could be due to getting wrong the source text .If he tried a bit more to understand it he could have done it more nicely. | Narendran No agrees/disagrees | |
| Translated into Tamil in the Tamil True Type Font: Bamini.ttf . Transliteration follows ehq;fs; yz;ld; nj.fp.26-y; ftu;r;rpf;Fg; /gfl;Lf;Fg; gof;fg;gl;lth;fs;;: nfy;yp G&f; kw;Wk; [h]d; ];ljk; Nghd;w gpugyq;fs; gy;itj;jpaUf;Fk; NkNy trpg;gJ/,Ug;gJ tof;fk;. MdhYk; vd;Dila mLf;Fkid tPl;bd; ntspNa thfdepWj;Jkplj;jpd; gpsTz;l rpnkz;l; jiuia mndh];f;fh n`k;ngy;ypd; Fjpfhy; nrUg;Gfs; jl;ba nghOJ > ,uz;lhk; cyfg;Nghupy; Fz;Lfshy; jfh;f;fg;gl;l FLk;gq;fis mur FLk;gj;jpdh; re;jpf;Fk; me;j gpf;rh; Ngh];l; Gifg;glq;fisg;gw;wp epidf;fhky; ,Ug;gJ fbdk;. vg;gb ,Ue;jhYk;> vd;Dila vspa Gwefh;g;gFjpf;F mthpd; tUiff;fhd Nehf;fk; MWjy; $WtjpYk; $LjyhdJ. n`k;ngy; - nghl;bf; N`hl;ly; mjw;F mg;gb xU nrhj;Jhpikg;ngah; fpilg;gjw;F Kd;Ng mjidf;fz;Lgpbj;j ngz;kzp. mth; vd;idr;re;jpf;f te;jpUg;gJ xU rhjhuz tPl;bw;F vg;gb Xh; Ie;J- el;rj;jpu>Xh; ,uTf;F £750 , tpLjp miwiag;Nghd;w Njhw;wj;ijAk; mjph;itAk; jUtJ vd;w jftiyj;jUtjw;F. cs; myq;fhu gj;jphpiffspd; cs;tphpg;Gfs; kw;Wk; ePq;fNs mij nra;Aq;fs; (eP.m.nr.) jsg;gf;f gjpTfs; ,tw;iwf; nfhz;L fzpj;jhy; Nkw;F cyfj;jpd; ghjp nrhj;J-chpikahsh;fs; ,jw;fhfNt jtpg;gJNghy; cs;sJ. ,g;Nghija tplaj;jpy;> n`k;ngy;jdkhf;fg;gLtjw;fhf> xU %d;Wkhb gFjp tpf;Nlhhpa ghzpapd; eLj;Jz;bypUe;J khw;wpaikf;fg;gl;l xU rhjhuz mLf;Fkid. ‘‘ePq;fs; nra;a KbAk; ’’> vdJ rikayiwia fz;fshy; Nehl;lkpl;lgbNa mth; nrhy;fpwhh;. ‘‘vth; Ntz;LkhdhYk; nra;ayhk;. Vd;KbahJ. (KbahJ vd;W nrhy;tjw;F) Kw;wpYk; fhuzNk ,y;iy. Mdhy; miwfSf;F ,ilNa njhlh;r;rp ,Uf;f Ntz;Lk;. xNu fUj;J njhlh;r;rpahf gpd;gw;wg;glNtz;Lk;’’. neUg;G Nghf;fpf;Fk; NkNy ntspNa mth; ghh;f;fpwhh;. ‘‘ mg;Gwk;... epr;rakh ePq;f mLj;j tPl;ilAk; thq;f Ntz;bajpUf;Fk;’’. ,J xU fpz;ly;. ehd; epidf;fpNwd;. ... ,Ue;jhYk;> ,e;j cj;Ntfj;jpd; Kuizg; ghprPypf;f> epjhdpg;gJ ey;yJjhd;. tpLjp miw vd;gJ xU epidit kwf;fbf;fr;nra;Ak; ,lk;. Kd;G jq;fpapUe;jtiug;gw;wpa milahsq;fs; VNjDk; ,Ue;jhy; ehk; rq;flg;gLNthk;. Fwpg;ghf ek;kpy; gyUk; tPLfspy; ehk; nra;akhl;lhj tp~aq;fisr; nra;tjw;fhfNt tpLjpfSf;Fr; nry;fpNwhk;. xU rlyj;ij gLf;ifapypUe;J mfw;wpaTld; (Rj;jk;) nra;tijg;NghNy xU tpLjp miw ed;F Rj;jg;gLj;jg;glNtz;Lnkd;W ehk; vjph;ghh;f;fpNwhk;. (rpy re;jh;g;gq;fspy;> ,J ep[khfNt ele;jpUe;jpUf;fpwJ.) tPl;L cs; myq;fhuk; vjph;f;fUj;ij cs;slf;fpapUf;fpwJ: mJ xU Qhgfq;fspd; njhFg;gfk;. mjpy; trpg;gth;fSila fij neUg;Gg; gFjp khlj;jpy; cs;s Gifg;glq;fspy;> Rtw;wpd; Nky; ,Uf;Fk; glq;fspy;> mykhhpapy; ,Uf;Fk; Gj;jfq;fspy; ,Uf;fNtz;Lk;. tpLjp miwfs; kdpjh;fshf ,Ue;jhy;> mitfs; rphpj;Jf;nfhz;bUf;Fk; %is gpwo;e;j NehahspfshfNth my;yJ ep[khd igj;jpaf;fhuh;fshfNth ,Uf;ff;$Lk;. Transliteration of the above in Roman script as the technical error do not permit the Bamini.ttf to be visible. Sorry for the inconvenience. Naangal London the.ki.26-il kavarccikkup/pakattukkup pazhakkappattavarkal: kelli brook marrum jasan statham pondra pirabalangal pal vaiththiyarukkum mele vasippathu/iruppathu vazhakkam. Anaalum ennudaiya adukkumanai viittin veliye vaahana niruththumidaththin pilavunda ciment tharaiyai anoska hempellin kuthikaal seruppukal thattiya pozhuthu , irandaam ulakapporil kundukalaal thakarkkappattak kudumbangalai arasa kudumbaththinar sandhikkum andha pikccar post pukaippadangalaip parri ninaikkamal iruppathu kadinam. Eppadi irundhaalum, ennudaiya pura nagarp pakuthikku avarin varukaikkaana nokkam aaruthal kuuruvathilum kuuduthalaanathu. Hempel -botik hotal adharkku appadi oru soththurimaip peyer kidappatharkku munbe adhanai kandu pidiththa penmani. Avar ennaic candhikka vandhiruppathu oru saadharana viittirkku eppadi vor aindhu natchaththira , vor iravukku £750 , viduthi araiyaip pondra thotraththaiyum adhirvaiyum tharuvathu endra thakavalaith tharuvatharkku. Ul alankaarap pathirikaikalin ul virippukal marrum Niingale Adhai Ceiyungal (Nii. A.Ce) thalappakkap pathivukal ivarraik kondu kaniththaal Merkku ulakaththin paathi soththu urimaiyalarkal idharkkaakave thavippathu pol ullathu. Ippodhaiya vishayaththil , Hempelthanamaakkappaduvatharkaaka , oru moondru maadi pakuthi viktoriya paaniyin naduththundilirundhu maarriyamaikkappatta oru saadharana adukku manai. “Niingal seiyya mudiyum”, enathu samaiyalaraiyai kankalaal nottamittapadiya avar solkiraar. “ Evar vendumaanaalum seiyyalaam. Een mudiyaathu. ( mudiyaathu endru sollvatharku) murrilum kaaraname illai. Aanaal araikalukku idaiye thodarcci irukka vendum. Ore karuththu thodarcciyaka pinparrappada vendum”. Neruppup pokkikkum mele veliye avar paarkkiraar. “ Appuram... Niccayama niinga aduththa viittaiyum vaanga vendiyathirukkum”. Idhu oru kindal. Naan nineikkiren. ... Irundhaalum, indha uthvekaththin muranaip parisiilikka, nidhaanippathu nallathuthaan. Viduthi arai enpathu oru nineivai marakkaadikkac ceiyum idam. Munbu thangiyirundhavaraip parriya adaiyaalangal edhenum irundhaal naam sankadap paduvom. Kurippaka nammil palarum viidukalil naam seiyya maattaatha vishayangalaic ceivatharkaakave viduthikalukkuc celkirom. Oru sadalaththaip padukkaiyilirundhu akarriyavudan ( suththam) seivvathaip pole oru viduthi arai nangu suththap paduththappadavendumendru naam edhir paarkkirom.( sila sandharppangalil, idhu nijamaakave nadandhirundhirukkirathu.) Viittu ul alankaaram edhir karuththai ulladakkiyirukkirathu: Adhu oru njyaapakangalin thokuppakam. Adhil vasippavarkaludaiya kadhai neruppuppakuthi maadaththil ulla pukaippadangalil, suvarrin mel irukkum padangalil, alamaariyil irukkum puththakangalil irukka vendum. Viduthi araikal manitharkalaaka irundhaal, avaikal siriththuk kondirukkum muulai pirazhndha noyaalikalaakavo allathu nijamaana paiyiththiyak kaararkalaakavo irukkakkuudum.
| Entry #14291 — Discuss 0
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 2.63 | 2.50 (4 ratings) | 2.75 (4 ratings) |
| லண்டன் SE26ல் நாம் கவர்ச்சிக்குப் ஆட்பட்டுள்ளோம்: கெல்லி புரூக்கும் ஜேசன் ஸ்டாதமும் பல் மருத்துவரின் குடியிருப்பின் மேல் வசித்து வந்தார்கள். ஆனால் அனவ்ஷ்கா ஹெம்பெல்லின் பாதங்கள் என் வீட்டின்வெளியே உள்ள வண்டிகள் நிறுத்துமிடத்தின் சிமிண்ட் வெடிப்புகளில் பட்டவுடன், இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது குண்டுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்வையிட வந்தபோது பிக்சர் போஸ்டில் வெளியான அரசியை நினைக்காமல் இருப்பது கடினம். எனினும், என்னுடைய ஆர்பாட்டமற்ற புறநகரில் அவள் குறிக்கோள், அனுதாபம் காட்டுவதை விட அதிகமானது. பெண்களுக்கான ஓட்டலை, அது பிறிதொரு வியாபாரப் பெயரைப் பெறுமுன், கண்டு பிடித்த பெண்மணி – ஹெம்பெல் – மனைமாட்சி பத்திரிகை பக்கங்களையும், நீங்களே செய்து பாருங்கள் போன்ற இணைய அரங்கங்களிலும் பிரசுரமாகும் கவலை நிறைந்த கருத்துக்களையும் ஒப்பிடும் போது, மேற்கத்திய நாட்டு சொத்துரிமையாளர்களில் பாதிப்பேர் விரக்தியடையும் கேள்வி; சாதாரணமான ஒரு வீட்டிற்கு, ஒரு நாளைக்கு பவுண்ட் 750 வாடகையாக வசூலிக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலின் அறையின் அமைப்பை எவ்வாறு அளிப்பது என்ற தகவலை எனக்கு அளிப்பதற்காக வந்துள்ளாள். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்த வரை, ஹெம்பெல் ஆலோசனையில் கவுரவாமாக மாற்றப்பட்ட விக்டோரியா காலத்தின் அடுக்கு மாடி வீட்டின் நடுப்பகுதி. அவள் என்னுடைய சமையலறையைப் பார்வையிட்டபடி ”உங்களால் முடியும்,” என்றாள். “எவரும் செய்ய முடியும். முடியாது என்பதற்கு முழுமையான காரணமே ஒன்றுமில்லை. ஆனால் அறைகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். கடைசி வரை அவைகள் ஒரே மாதிரியாகக் காட்சி தர வேண்டும்.” வருத்தமுடன் அவள் தீ விபத்தின் போது வெளியேறும் நடை மீது பார்வையைச் செலுத்தினாள். சரியாகச் சொன்னால், அடுத்த வீட்டையும் நீங்கள் வாங்க வேண்டி இருக்கும்.” “அது கேலியாகத் தோன்றலாம் என எண்ணுகிறேன்.” எனினும், இந்த உணர்ச்சிவேகத்தின் கஷ்டங்களை அலச, சிறிய இடைவெளி அவசியம். ஓட்டல் அறை நினைவிழந்தவர்களுக்கான இடம். நம்மில் பலர் வீட்டில் செய்யமுடியாதவற்றைச் செய்ய ஓட்டலுக்குப்போவதால், அங்கு நமக்கு முன் தங்கியவரின் அடையாளங்கள் மிச்சமிருந்தால் நாம் வருத்தப்படுவோம். படுக்கையிலிருந்து பிணம் அகற்றப்பட்டவுடன் எவ்வாறு அந்த அறை சுத்தமாக்கப்படுகிறதோ அவ்விதமே ஓட்டல் அறையும் நன்றாக சுத்தமாக்கப் படுவதை நாம் எதிர்பார்க்கிறோம் (சில சந்தர்பங்களில், இது நிஜமாகவே நிகழ்ந்துள்ளது). ஆனால் வீட்டின் உள் அமைப்பு இதற்கு முற்றிலும் மாறுபட்டது: அது ஞாபகங்களின் கருவூலம். அதில் வசிக்கும் நபர்களின் கதை கூடத்தில் தீயடுப்பு இடத்தின் மீதான அடுக்கறையின் புகைப்படங்களிலும், சுவற்றில் உள்ள சித்திரங்களிலும் அடுக்கறை புத்தகங்களின் மூலமும் வெளிப்படும் இடம். ஓட்டல் அறைகள் மனிதர்களானால், சிரித்தவாறு இருக்கும் மூளை அறுவை சிகிச்சை நோயாளிகள் அல்லது உண்மைபோல் தோன்றும் மன நோயாளிகளாக இருக்கும்.
| Entry #14171 — Discuss 0
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 2.59 | 2.50 (4 ratings) | 2.67 (3 ratings) |
| லண்டன் SE26 இன் நவீனத்துவத்துக்கு நாங்கள் பழக்கப்பட்டே உள்ளோம் ஏனெனில் கெல்லி புரூக் மற்றும் ஜேசன் ஸ்தாதம், பல் மருத்துவ மையத்திற்கு மேல் தான் முன்பு வசித்து வந்தனர். இருப்பினும் அணுஸ்க் ஹெம்பலின் காலடிகள் எனது அடுக்குமாடி வீட்டுக்கு வெளியே உள்ள கார் நிறுத்துமிடத்தின் உடைந்த சிமெண்ட் மீது பட்ட போது, இரண்டாம் உலகப் போரின் போது அரச குடும்பத்தினர் குண்டடி பட்ட குடும்பங்களை சந்திப்பதை காட்டுகின்ற அந்த செயற்கையான புகைப்படங்களை எண்ணாமல் இருக்க முடியாது. அவள் என்னை சந்திப்பதற்காக அங்கே வந்ததன் காரணம் அனுதாபத்தை காட்டுவதற்காக மட்டுமல்ல என்றே எனது சிற்றறிவுக்குப் படுகிறது. நவீன கடையைக் கொண்ட ஹோட்டல் என்ற தனிச் சொத்துடைமை ஏற்படுவதற்கு முன்பு அதை உருவாக்கியவளே ஹெம்பல் தான். அவள் சொல்ல வந்த தகவல், ஒரு சாதாரண வீட்டுக்கு எவ்வாறு ஓர் இரவுக்கு £750 கட்டணம் கொண்ட அறையுடைய ஓர் ஐந்து-நட்சத்திர ஹோட்டலின் தோற்றத்தைக் கொடுப்பது என்ற வகையில் அமைந்திருந்தது. அவள் கூறியது, வீட்டு உட்புற அலங்கார சஞ்சிகைகளிலும் இணையத்தள விவாத அரங்கங்களிலும் இடம்பெறுகின்ற பதிவுகளைப் பார்க்கின்ற போது, மேற்கத்திய நாடுகளின் சொத்துரிமையாளர்களில் பாதிப் பேர் ஏங்குகின்ற வகையிலான தகவலாக இருந்தது. ஹெம்பலிஸை பொறுத்தமட்டில், மூன்று மாடி கொண்ட விக்டோரியா காலத்து தொடர் வீடு ஒன்றின் மையப் பகுதியை ஓர் அடுக்குமாடி வீடாக உருமாற்றுகின்ற ஒரு மிகச் சாதாரண செயலாகவே இது இருந்திருக்கிறது. “உங்களால் இதை செய்ய முடியும்,” என்றவள் எனது சமையலறையை ஒரு கண்ணோட்டமிட்டாள். "எல்லோராலும் இதை செய்ய முடியும். முடியாது என்று சொல்வதற்கு காரணமே கிடையாது. ஆனால் அறைகளுக்கிடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும். ஒரே மையக் கருத்து கையாளப்பட்டிருக்க வேண்டும்." அவள் ஓர் ஏக்கப் பார்வையோடு வீட்டு வெளிப்புற தீப்படிக்கு மேலே பார்த்து, "அதன் பிறகு பக்கத்து வீட்டையும் நீங்கள் நிச்சயமாக வாங்கியே ஆக வேண்டும்," என்றாள். அவள் இதை வேடிக்கைக்காகவே கூறினாள் என்று தான் நான் நினைக்கிறேன். ... இத்தகைய வேட்கையின் அதிசயத்தைப் பற்றி சிறிது நேரம் யோசிப்பது முக்கியமாகும். ஹோட்டல் அறை என்பது ஒரு மாய மண்டலமாகும். நம்மில் பலர் வீட்டில் செய்யத் துணியாதவற்றை ஹோட்டல்களில் செய்வதற்காக அங்கே செல்வதால், நமக்கு முன்பு தங்கியிருந்தவரின் சாயல் அங்கே சிறிதே இருந்தாலும் கூட அது நமக்கு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. படுக்கையிலிருந்து ஒரு பிணம் அப்பொழுது தான் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதைப் போன்று ஹோட்டல் அறை மிகச் சுத்தமாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். (சில வேளைகளில், இது உண்மையாகவே நடந்தும் கூட இருக்கலாம்.) வீட்டின் உட்புறமோ இதற்கு நேர்மாறான வகையில் அமைந்திருக்கிறது: அது நினைவுகளின் வைப்புப் பெட்டகமாகும். மேடையில் உள்ள புகைப்படங்கள், சுவற்றில் உள்ள படங்கள், பரண்களில் உள்ள புத்தகங்கள் அனைவற்றிலும் அங்கே வசிக்கின்றவர்களின் கதை வெளிப்பட வேண்டும். ஹோட்டல் அறைகள் மாத்திரம் மனிதர்களாக இருந்தால், மூளையின் செயல்திறன் அற்ற நோயாளிகள் அல்லது கொலைகாரர்களைப் போன்று அவர்கள் நகைத்துக் கொண்டிருப்பார்கள்.
| Entry #14317 — Discuss 0
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 2.25 | 2.25 (4 ratings) | 2.25 (4 ratings) |
| | Entry #12566 — Discuss 0
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 2.17 | 2.67 (3 ratings) | 1.67 (3 ratings) |
- 1 user entered 1 "dislike" tag
இது நல்ல வேடிக்கை", என்று நான் நினைத்துக்கொண்டேன் | Grammar errors The source has present tense which is missing in the target.He has very nicely attempted to give a fluent Tamil story.But at places he misses some salient features in grammar, syntax and expression which reduce the accuracy. | Narendran No agrees/disagrees | |
| லண்டன் எஸ்ஈ26 பகுதியில் நாங்கள் கவர்ச்சிக்குப் பழக்கப்பட்டுவிட்டோம்: கெல்லி புரூக்கும் ஜேசன் ஸ்டாத்தமும் பல் வைத்திய சாலைக்கு மேலே வசித்துவந்தார்கள். ஆனால், அனௌஸ்கா ஹெம்பலின் பாதங்கள் என்னுடைய அடுக்குக் குடியிருப்புக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தின் வெடிப்புவிழுந்த சிமெண்ட் தரையில் பட்டபொழுது, அந்தக் காட்சியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் குண்டுவெடிப்பால் புலம்பெயர்ந்த குடும்பங்களை பேரரசி சந்தித்த அஞ்சல் அட்டை புகைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. எனினும், நான் குடியிருக்கும் எளிய புறநகர்ப் பகுதியின் பரப்பில் இவளது திருப்பணி ஆறுதல் கூறுவதற்கு அப்பால் சென்றுவிட்டது. ஹெம்பல் என்ற – இந்த உடமைப் பெயர் தாங்குவதற்கு முன்பே அந்த ஆடையக விடுதியை உருவாக்கிய – அந்தப் பெண்ணொருத்தி எனக்குச் சொன்ன அந்தத் தகவலுக்காக, உள்-அலங்கார இதழ்களில் வரும் வர்ணனைப் படங்களையும் ‘நீங்களே செய்யலாம்’ இணைய விவாத மேடைகளில் போடப்படும் துடிப்பார்வச் சேதிகளையும் வைத்துப் பார்க்கும்பொழுது, மேற்குலகிலுள்ள பாதிச் சொத்துடமையாளர்கள் ஏங்கித் தவிப்பதாகத் தோன்றுகிறது: ஒரு சாதாரண வீட்டிற்கு எப்படி ஓர் ஐந்து நட்சத்திர, இரவுக்கு-750-பவுண்டு விடுதிச் சொகுசு அறை போல் தோற்றத்தையும் உல்லாச உணர்வையும் தருவது என்ற சங்கதி. ஆக, இதை ஹெம்பல்மயமாக்கிக் கூறினால், ஒரு மூவடக்கு விக்டோரிய அரை-சொகுசு மாடத்தின் நடுத்தட்டை வெட்டியெடுத்து ஓர் எளிய, மாற்றியமைத்த அடுக்குக் குடியிருப்பு உருவாக்குவது குறித்த விஷயம். “உங்களால் முடியும்”, என்று என் வீட்டு சமையலறையைச் சுற்றி ஒரு நோட்டமிட்டவாறு ஹெம்பல் கூறுகிறாள். “யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஏன் செய்யமுடியாது என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. ஆனால் ஒன்று: அறைகளுக்கு இடையில் தொடர்ச்சி இருக்கவேண்டும். வீடு முழுக்க ஒரே கருத்தோட்டம் பரவியிருக்கவேண்டும்.” அவள் தீவிபத்து வாயில் வழியாக ஏக்கத்துடன் வெளியே பார்த்த வண்ணம், “ஆமாம், நீங்கள் பக்கத்து வீட்டையும் வாங்கியாகவேண்டும்” என்கிறாள். அது ஒரு நகைச்சுவையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. இருந்தாலும், இப்படி விசித்திரமாக உணர்ச்சிவயப்படுவது பற்றி சற்று நின்று யோசிக்கத் தகுமானது தான் இது. விடுதி அறை ஒரு ஞாபகமறதிக்கான வெளி. நமக்கு முன்பு தங்கியவரின் அடையாளம் எதுவும் அங்கு இருந்தால் நாம் சங்கடப்படுவோம். குறிப்பாக, நம்மில் பலர் வீட்டில் செய்ய விரும்பாதவற்றைச் செய்வதற்காக விடுதிகளுக்குப் போகிறோம், அல்லவா! விடுதி அறை துடைத்துச் சுத்தமாக இருக்கவேண்டும், ஏதோ அப்போதுதான் படுக்கையிலிருந்து ஒரு பிணம் இழுத்து வெளியாக்கபட்டிருந்தது போல (சில சந்தர்ப்பங்களில், இது உண்மையிலேயே நிகழ்ந்திருக்கும்) இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், வீட்டின் உட்புறம் பற்றி நேர்மாறான யோசனை நிலவுகிறது: அது நினைவுகளின் பெட்டகம். அதில் வசிப்பவர்களின் கதை கணப்புத் தட்டின் மீது புகைப்படங்களாகவும், சுவற்றில் தொங்கும் படங்களாகவும், அடுக்கறையில் புத்தகங்களாகவும் இருக்கவேண்டும். ஒருவேளை விடுதி அறைகள் மனிதர்களாக இருந்திருந்தால் அவர்கள் நரம்பு ரணச் சிகிச்சை நோயாளிகளாகவோ அநேகமாக புத்தி பேதலித்தவர்களாகவோ இருப்பார்கள். | Entry #14350 — Discuss 0
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 2.13 | 2.00 (4 ratings) | 2.25 (4 ratings) |
| ‘விடுதியை வீட்டிற்க்கு கொண்டு வருதல் ‘எழுதியது எம். ஸ்வீத் ‘எக்கானமிஸ்ட்டுக்காக என்பதிலிருந்து லண்டனின் SE26ன் கவர்ச்சியான வாழ்க்கை நமக்கு பழக்கமான ஒன்று: கெல்லி ப்ரூக் மற்றும் ஜேஸன் ஸ்டாதம் பற்சிகிச்சை மருத்துவர் இடத்திற்கு மேலே வாழ்வது வழக்கம். என்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே அணூஸ்காவின் குதியடிக்கட்டை வெளியேயுள்ள வண்டிகள் நிறுத்தும் பிளவுபட்ட சிமெண்டில் சத்தம் போடும்பொழுது என்னால் அரச குடும்பம் இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது குண்டுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்று பார்த்த பொழுது எடுத்த அந்த புகைப்பட அட்டைகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளுடைய புறநகரின் விளம்பரமற்ற பயணம் அனுதாபம் தருவதற்க்கு மட்டுமில்லை அதற்க்கு மேல்பட்டது. ஹெம்பெல்,- போதிக் விடுதியை அதற்க்கு,அந்த சொத்திற்க்கான பெயர் ஏதும் இல்லாத பொழுது கண்டு பிடித்த பெண் எனக்கு அந்த தகவலை கொடுத்த பெண்மணி. கணித்துப்பார்த்தால் எந்த உள்ளழகு விரிப்புகள் பத்திரிகைகளிலோ மற்றும் தகவல்களிலோ எதிர்பார்ப்புடன் DIY கணினி தகவல்களில்களிலோ வெளியடாததாக இருந்தது மேற்கத்திய உலகின் பாதி சொத்து சொந்தக்காரர்கள் எப்படியாவது சாதாரண வீட்டிற்க்கு ஒரு ஐந்து நட்சித்திர ஒட்டலின் அதிர்வுகள் கொடுக்கவேண்டும் ஒரு இரவிற்க்கு 750 பவுண்டுகள் கொடுக்கும் அறையாக பார்வையிடப்படவேண்டும் என்பதில் குறியாக இருந்தணர். ஹெம்பிலிசிக்கு இந்த விஷயத்தில் விக்டோரியன் கால பாதி மூண்றடுக்கு அடுக்கு மாடியின் ஒரு துண்டை ஒரு சாதாரண அடுக்க மாடி குடியிருப்பாக மாற்ற வேண்டும் என்பதாகும். சொன்னாள் “உன்னால் முடியும் என்னுடைய சமயலறையை ஒரு நோக்கம்விட்டவாறே யார் வேணுமானாலும் செய்யலாம் என்ன காரணத்தினால் ஏன் செய்யமுடியாது? அறைகளுக்குஇடையே தொடர்பு இருக்கவேண்டும்பூராவிற்றிலும்ஒரே யுக்திஇருக்கவேணும்.” அவசர கால தீயிலிருந்து தப்பிக்கும் வழியை யோசனையுடன் பார்த்தவாறே “ இருந்தாலும் அடுத்தவீட்டை ~நீ வாங்கவேண்டும்.” என்றாள் நல்ல தமாஷ் என்று நினைத்தேன். ... சிறிது நேரம் நிதானித்தால் இந்த விசித்திரமான உந்துதலை கருத்தில் கொள்ளலாம்.. விடுதி அறை என்பது மறக்ககூடிய இடம்.இதற்க்கு முன்பு இருந்தவரைப்பற்றி ஏதாவது அடையாளம் இருந்தால் நமக்கு பிரச்சினை.குறிப்பாக நம்மில் பலர் விடுதிக்கு செல்வது நாம் வீட்டில் செய்ய முடியாததை, காரியங்களை செய்வதற்க்குத்தான். நாம் விடுதியின் அறை அடியோடு சுத்தமாக இருக்கவேண்டும் எப்படியென்றால் ஒரு பிணம் படுக்கையை விட்டு அப்பொழுதுதான் இழுத்துப்போட்டார் போல )(சில நிகழ்ச்சிகள் அவ்வாறே நிஜமாக நடந்திருக்கலாம்) வீட்டின் உள்பகுதி அதற்க்கு எதிர்ப்பதமான கருத்தை உருவாக்குகிறது அது நினைவுகளின் களஞ்சியம். .முன்பு வாழ்ந்தவர்களின் கதைகள் மற்றும் புகைப்படங்கள் அலங்கார காட்சிகூடத்தில் வைக்கவேண்டும். புகைப்படங்கள் சுவற்றின் மேலும் புத்தகங்கள் அலமாரிகளிலும் இருக்கவேண்டும். விடுதி அறைகள் மனிதர்களாக இருந்தால் அவை சிரித்துக்கொண்டிருக்கும் மன நோயாளிக்ளாகவோ அல்லது மனம் திரிந்த நோயாளிகளாக இருக்கும்.
| Entry #14189 — Discuss 0
Rating type | Overall | Quality | Accuracy |
---|
Entry | 1.88 | 2.00 (4 ratings) | 1.75 (4 ratings) |
| | | | | X Sign in to your ProZ.com account... | | | | | | ProZ.com translation contestsProZ.com translation contests offer a fun way to take a break from your normal routine while testing and honing your skills with fellow translators.
ProZ.com Translation Contests. Patent pending. |